தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பா நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் வசந்த் (26). இந்த வாலிபர் கூலி வேலைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் சிறுமியுடன் பழகி வந்த நிலையில் திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு கடந்த மார்ச் மாதம் சிறுமியை ஈரோட்டில் இருந்து கடத்தி சென்றார். இந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட நிலையில் 17 வயது சிறுமியை கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தஞ்சாவூரில் இருப்பது தெரியவந்த நிலையில் தஞ்சை போலீஸ் உதவியுடன் அவர்களை பிடித்தனர். இதைத்தொடர்ந்து வாலிபரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடந்து சென்றது தெரியவந்தது. மேலும் வசந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.