காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்த லூவியரசன் (34).  இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவரது மனைவி கீர்த்தனா (26), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அருண்குமார்(26) என்பவருடன் கீர்த்தனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்த விவகாரம் லூவியரசனுக்கு தெரியவந்ததும், அருண்குமாரை  கொலை செய்ய  திட்டமிட்டார். லூவியரசன், அருண்குமாரை பைக்கில் அழைத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இருந்த ஜல்லி மெஷின் அருகே மது அருந்திய பின், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த  லூவியரசன் துணியால் அருண் குமாரின் கழுத்தை இறுக்கி, கத்தியால் பல முறை குத்தி, ஆணுறுப்பையும் வெட்டி கொலை செய்து விட்டு நேராக காவேரிப்பாக்கம் போலீசில் சரணடைந்தார்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த அருண்குமாரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் லூவியரசனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.