ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்ரா, வைஷ்ணவி தேவி கோயிலை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. தற்போது ஜம்மு முழுவதும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.