மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம் பெண் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 19ஆம் தேதி இவர் தன் பாட்டியுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் தன் தோழியின் வீட்டில் தங்கி உள்ளார். இந்த இளம் பெண் தன் தோழியின் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்த நிலையில் பின்னர் தன் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக தன் நண்பன் ஒருவனை தோழி அழைத்து அந்த இளம் பெண்ணை வீட்டில் கொண்டு விடுமாறு கூறியுள்ளார். அந்த வாலிபர் காரில் வந்த நிலையில் அவருடன் 3 நண்பர்கள் இருந்தனர். அதோடு அந்தப் பெண்ணின் தோழிகள் இருவரும் இருந்தனர். அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அந்தப் பெண்ணுக்கு தோழிகள் இருவரும் மயக்க ஊசி போட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 நாட்கள் கழித்து அந்த பெண் வீட்டின் கழிவறையில் கண்விழித்தார்.

அப்போது உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாண நிலையில் கிடந்தார். அதன்பிறகு தான் அந்தப் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர்கள் இது பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்த பெண் தன் குடும்பத்தினரிடம் நடந்த விவரங்களை கூறிய நிலையில் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது