நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.