
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இந்த கல்லூரியில் கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தயாரானார். அப்போது 3 மர்ம நபர்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மணிகண்டனின் நெருங்கிய நண்பர் வீரபத்திரன், முத்து உள்பட 3 பேர் இணைந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக வீரபத்திரன் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். வீரபத்திரன் தனது காதலியை மணிகண்டனிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.