தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டிலேயே கணினி மூலம் தமிழ் வழியில் தேர்வு எழுதிய ஆனந்தன் என்ற மாற்றுத்திறனாளி மாணவன் 600க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பூந்தமல்லியில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.