தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்த இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் ரிசல்ட் தெரிந்து விடும். மேலும் மாணவர்களின் கைபேசி நம்பருக்கும் அதாவது பதிவு செய்த செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக ரிசல்ட் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.