ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்பட்டதால் அவர்களுக்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சிந்து நதிநீரை நிறுத்தியதோடு வேறு சில முக்கிய நதிகளையும் நிறுத்தியது. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டவர்களையும் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்திய ராணுவம் தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இந்திய ராணுவம் முன்னதாக எக்ஸ் பக்கத்தில் தாக்குவதற்கு தயார் வெற்றி பெறுவதற்கு தயார் என்று பதிவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதி கிடைத்துவிட்டது ஜெய்ஹிந்த் என்ற பதிவிட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர், முசாஃபாரத், கோட்லி பற்றும் பகல்பூரின் முகமது கிழக்கு பகுதி உட்பட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு முன்பாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி காஷ்மீர் எல்லை பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில் உள்ள நிலைகளிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஜோரி மாவட்டத்தில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
