
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல் போயிருந்தன.
இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பழவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த மாரிமுத்து(47) என்பவர் கோழிகளை திருடியது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோழிகளை நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.