திருடர்கள் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, தைரியத்திலும் நவீன முறையை ஏற்று செயல்படுகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. அதாவது பிஜ்னோரில் உள்ள ஒரு மொபைல் கடையில், வாடிக்கையாளராக நடித்து வந்த ஒரு நபர், கடைக்காரரின் கண்களில் மிளகாய்ப் பொடி வீசி, அங்கிருந்த ரூ.50,000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி வீடியோவில், முகமூடி அணிந்து கடைக்கு வந்த அந்த நபர், சுஹைல் என்ற கடைக்காரரிடம் முதலில் ரூ.19-க்கும், பின்னர் ரூ.29-க்கும் ரீசார்ஜ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன்பிறகு அவர், சுஹைலின் கண்களில் மிளகாய்ப் பொடி வீசிவிட்டு, மேசையில் வைத்திருந்த பணத்தைப் பறித்து கடையை விட்டு ஓடிவிட்டார். பயந்த நிலையில் பதறிய சுஹைல், தனது கண்களைத் திறக்க முடியாமல் தவித்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசில் அளிக்கப்பட்டுள்ளது.
उत्तर प्रदेश के जिला बिजनौर में बदमाश ने आंखों में लाल मिर्ची पाउडर डालकर मोबाइल शॉप मालिक सुहैल से 50 हजार रुपए लूटे !!
बदमाश ने कस्टमर बनकर पहले 19, फिर 29 रुपए का रिचार्ज कराया। फिर जैकेट से मिर्ची पाउडर निकालकर दुकानदार की आंखों में फेंक दिया। pic.twitter.com/Ayq8ExyPjs
— Sachin Gupta (@SachinGuptaUP) April 30, 2025
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
