
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் தான் கோவையில் பூத் கமிட்டி நடைபெற்றது. மக்களுக்கு ஆதரவாக விஜய் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் அரசியல் தலைவராக விஜய் முதன்முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் செல்கிறேன். மதுரையில் என்னை ரசிகர்கள் பின் தொடர வேண்டாம்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ரசிகர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள் என விஜய் அறிவுரை கூறியுள்ளார். மேலும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கூறிய அறிவுரையை மீறி மதுரையில் விஜயின் ரசிகர்கள் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து செல்கின்றனர்