
திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இளம்பெண் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்தார்.
இவர் படித்து முடித்துவிட்டு அதே பல்கலைகழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழகத்தின் வேதியல் துறை பேராசிரியராக அம்பையை சேர்ந்த கண்ணன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இவர் மீது தற்காலிக பேராசிரியராக பணியாற்றிய இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இளம்பெண் கூறியதாவது, நான் மாணவியாக இருந்தபோது கண்ணன் சில வருடங்களாக எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார்.
இப்போது ஆசிரியராக பணியாற்றி வரும் என்னிடம் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விடுகிறார். என்னுடைய ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று பேராசிரியர் கண்ணனிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பல்கலைக்கழக குழு அமைப்பு கண்ணனிடம் விசாரணை நடத்துமாறு துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கண்ணனிடம் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.