சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சிட்டி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 22 வயதான டூ ஜுன்ஹாவோ, கடந்த ஆண்டு ஒரு கொடூரமான விபத்தில் சிக்கியுள்ளார். தனது தோழி லி ஜியாஜுனுடன் ஒரு பிளாட் பகிர்ந்துகொண்டு வசித்து வந்த அவர், மின் சைக்கிளின் பேட்டரியை வீட்டுக்குள் சார்ஜ் செய்வது ஆபத்தானது என பலமுறை எச்சரித்திருந்தார். ஆனாலும், லி தனது பிடிவாதத்தை மாற்றவில்லை. ஒரு நாள் காலை 6 மணியளவில் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயில் சிக்கி டூ ஜுன்ஹாவோவுக்கு 90% உடல் எரிந்து, அவருடைய மூச்சுக்குழாய் மற்றும் விரல்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

 

 

View this post on Instagram

 

A post shared by South China Morning Post (@scmpnews)

சம்பவத்தின் போது வெளியேற வாய்ப்பு இருந்த லி, வீட்டு வாசலை வெளியேறிய பின் பூட்டி விட்டார். இதனால், 30 விநாடிகள் தீக்குள் சிக்கியபடி டூ கதவைத் திறக்க போராடியுள்ளார். சிசிடிவி காட்சிகளில் இது தெளிவாக பதிவாகியுள்ளன. கடந்த 10 மாதங்களில் டூ 12 தோல் மாற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது தந்தை 5 முறை தோல் தானம் செய்துள்ளார். இந்த சிகிச்சைகளுக்காக குடும்பம் 2.8 மில்லியன் யுவான் செலவழித்துள்ள நிலையில், ஆன்லைன் உதவியாக 2.6 மில்லியன் யுவான் பெறப்பட்டாலும், அவர்களின் நிலை இன்னும் சிரமமுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், லி ஜியாஜுன், வீட்டு உரிமையாளர் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டும், அவர்களிடமிருந்து இழப்பீடு பெரிதாக கிடைக்கவில்லை. லியின் குடும்பம் வெறும் 10,000 யுவான் (ரூ.11,000) மட்டுமே வழங்கியுள்ளனர். “என் பெற்றோர்கள் தங்களது தோலையும் உயிரையும் எனக்காக தந்துள்ளனர். எனது வாழ்க்கை எனக்கே மட்டுமல்ல” என உருக்கமாக கூறிய டூ, தற்போது மன உறுதியுடன் மீண்டுவிட்டு, நாய் ஒன்றை நம்பிக்கையுடன் வளர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த காலத்தில் தனது கல்லூரி பட்டமளிப்பு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்.