மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகு விபத்தில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த பயங்கர விபத்து, நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கொங்கோ நதியில் நிகழ்ந்தது. மரத்தால் செய்யப்பட்ட மோட்டார் இயங்கும் பெரிய படகொன்றில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, பயணம் செய்துகொண்டிருந்தனர்.

‘HB Kongolo’ என்ற பெயருடைய படகு, Matankumu துறையிலிருந்து Bolomba பகுதியை நோக்கி பயணம் சென்றபோது, Mbandaka என்ற நகரத்தின் அருகே திடீரென தீப்பிடித்து, பின்னர் கவிழ்ந்துவிட்டது.

 

அந்த நேரத்தில் ஒரு பெண், படகில் சமைப்பதில் ஈடுபட்டிருந்தபோதே தீ ஏற்பட்டதாக நதிக் கமிஷனராக உள்ள Comptent Loyoko தெரிவித்தார். அதாவது அந்த மரப்படையில் ஒரு பெண் சமைப்பதற்காக தீ பற்ற வைத்ததால் அந்த டீ படகு முழுவதும் பரவியதையடுத்து பயணிகள் பலர் நீரில் குதித்தனர். ஆனால் பலர் நீந்தத் தெரியாததால் மூழ்கி உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், இவர்களில் சிலர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தற்காலிகமாக நகராட்சி மன்றத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.