சத்தீஷ்கர் மாவட்டத்திலுள்ள சக்தி மாவட்டத்தில் ராகுல் அஞ்சால் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த 8-ம் தேதி தன்னுடைய காதலியான சிறுமியை பார்ப்பதற்காக ராகுல் சென்றார். அவர் சிறுமையின் வீட்டிற்கு சென்ற நிலையில் இதனை சிறுமியின் பெற்றோர் கவனித்து விட்டனர். இதனால் கோபமடைந்த அவர்கள் அந்த வாலிபரை பிடித்து நிர்வாணப்படுத்தி அடித்தனர்.

அதுமட்டுமின்றி தங்களுடைய உறவினர்களை அழைத்து செருப்பு, கேபில் மற்றும் பைப்புகளை வைத்தும் அந்த வாலிபரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதே போன்று மறுநாளும் அந்த வாலிபரை நிர்வாணமாக தெருவில் வைத்து அடித்து சித்திரவதை செய்தனர். இதில் அந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு புகாரும் வராத நிலையில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களின் அடிப்படையிலேயே போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.