திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருவரும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கோவையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு வேன் ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் டெல்லி பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பழனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.