
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிகுழியில் தங்கியிருந்த ஜேக்கப் தோமஸ் (23) என்பவர், வேலை அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்த்திட்டா மாவட்டம் ரன்னியைச் சேர்ந்த அவர், ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, தங்கியிருந்த அபார்ட்மென்டின் மடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேக்கப், கொச்சி காக்கனாட்டில் உள்ள Linways Technologies என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த டிசம்பரில் சாப்ட்வேர் இன்ஜினியராக சேர்ந்தார்.
வேலைக்கு சேர்ந்த வெறும் 4 மாதங்களிலேயே தற்கொலைக்கு உட்பட்ட அவர், தொடர்ந்து பெற்றோரிடம் வேலை தொடர்பான மன அழுத்தம், தூக்கம் சரியாக இல்லாதது மற்றும் அலுவலகத்தில் நடக்கும் தொந்தரவு குறித்து பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன், ஜேக்கப் தனது தாய்க்கு ஒரு வீடியோ செய்தியை அனுப்பி, தனக்கு இருந்த மனஉளைச்சல் மற்றும் வேலை அழுத்தம் பற்றிய துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதனை அனுப்பிய பிறகே அவர் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் ஊர் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்திருப்பதுடன், விசாரணை நடைபெற்று வருகிறது.