அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோசடி வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதிமுக கலை பிரிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் ராஜா. இவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் ரௌடிகள் லிஸ்டிலும் அவர் பெயர் உள்ளது. ஒரு இளம்பெண் 30 லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் தங்க நகை மோசடி செய்ததாக ராஜா மீது புகார் அளித்துள்ளார். இதனால் அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.