
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இதனால் அதிமுக பாஜக கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்தார். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது சீமான் நான் மத்திய அமைச்சரை சந்தித்தால் சந்தித்தேன் என சொல்ல போகிறேன். நீங்களாகவே எதையாவது கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களை சந்தித்தேன் எனக்கு கூறுவதற்கு எனக்கு என்ன பயமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.