18 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்களை அடித்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி சொந்த மண்ணில் csk வை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்தது.  சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும்.

இந்நிலையில்  சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களிடம் இருந்து 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.