
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் 26 வயதான தினேஷ் என்பவர் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 2023ல் ஃபதேபூரைச் சேர்ந்த ராதாவை திருமணம் செய்து கொண்ட தினேஷுக்கு ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு தினேஷும் ராதாவும் அடிக்கடி சண்டைகளில் ஈடுபட்டுவந்தனர். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, ராதா கணவனை விட்டு தனது பெற்றோருடன் வாழத் தொடங்கினார்.
தினேஷ் தொடர்ந்து மனைவியிடம் தன்னுடன் திரும்ப வருமாறு கூறிய போதும், ராதா மறுத்து வந்துள்ளார். தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலமாகவும் இருவருக்கும் சண்டை தொடர்ந்திருக்கிறது.
நேற்று இருவரும் வீடியோ கால் மூலம் பேசி கொண்டிருந்தபோது, தினேஷ் திடீரென கத்தியை எடுத்து தன்னை தானே குத்திக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.