பதினெட்டாவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் தலைநகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆறாவது லீக் ஆட்டத்தின் நேற்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் 151 ரன்கள் அடித்தது. பின்னர் 152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி  17.3 ஓவரில் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றியை கைப்பற்றியது.

இதில்  அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 91 ரன்கள் அடித்தார். அவர் தான் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.  ஐபிஎல் வரலாற்றில் சேசிங்கின் பொழுது கொல்கத்தா அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக டி காக் மாபெரும் சாதனை படைத்திருக்கிறார். குயின்டன் டி காக் – 97 ரன்களும்,  மனீஷ் பாண்டே – 94 ரன்களும், கிறிஸ் லின் – 93 ரன்களும், பிஸ்லா – 92 ரன்களும், கவுதம் கம்பீர் – 90 ரன்களும் எடுத்துள்ள பட்டியல் வெளியாகியுள்ளது.