இந்திய அணியானது அடுத்தடுத்து நடக்கும்போகும் உலக கோப்பைகளை கைப்பற்றுவதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாகவும், உலக கிரிக்கெட் நாடுகள் இதிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில், “ஒரு புத்திசாலித்தனமான வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் ஏன் இந்த இந்திய அணியில் இல்லை என்று நான் தலையை சொரிந்து கொண்டிருக்கிறேன் . குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவர் பந்துகளை அடித்து விளையாடிய விதமும் எனக்கு பிடித்திருந்தது. இந்திய கிரிக்கெட் இந்த அளவிற்கு இருப்பது உண்மையிலேயே உலக கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு கவலையான விஷயம்தான்.
இந்தியா அணி டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக கோப்பையும் வென்றுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பையிலும் மிக அருமையாக விளையாடினார்கள், அடுத்து டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவிலும் நடக்கிறது. அடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்பிரிக்காவிலும் ஆடுகளங்கள் மெதுவாக சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றவாறு தான் இருக்கும். இந்திய அணி அங்கே சென்று தனக்கு சாதகமான சூழ்நிலையில் தான் விளையாட போகிறது. இந்திய அணி விளையாடக்கூடிய விதத்தில் 30 வீரர்கள் வெளியே இருக்கிறார்கள். உண்மையிலேயே மற்ற அணிகள் இந்திய அணிக்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் கவலையான விஷயம்” என்று கூறியுள்ளார்.
