அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியில் முக்கிய தலைவர்களையும் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. டெல்லிக்கு சென்று யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.