
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தினமும் சுமார் மூன்று குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2019 முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களில் அதிகளவிலான குழந்தை திருமணங்கள் நபரங்பூர் மாவட்டத்தில் மட்டும் 1,347 என பதிவாகியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுவதாவது, பழங்குடியின பழக்கவழக்கங்கள், வரதட்சணை சூழ்நிலை, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் பெண்கள் காதலித்து ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவையே குழந்தை திருமணங்களை தூண்டுகின்றன. இதை தடுக்க ஒடிசா அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி நிலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
குழந்தை திருமணத்தைத் தடுக்க, சமூகத்திலும், பெற்றோர்களிலும் மாறுபாடுகள் தேவைப்படுகிறது என சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார். மேலும், இளவயது திருமணங்களுடன், குழந்தை தொழிலாளர் பிரச்சனையும் இணைந்தே உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 328 குழந்தைகள் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடைவிதி மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.