பதினெட்டாவது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகிறது. தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று நினைக்கும் நிலையில் ஐபிஎல் கோப்பையோடு தோனியை வழி அனுப்ப சென்னை அணியானது  தீவிரமுனைப்பில் உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் இருவரின் புகைப்படத்தை பகிர்ந்து இவர்கள் இருவரும் சகோதரர்களா? என்று இணையத்தில் விவாதம் ஒன்று நடந்து வருகிறது.

அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவும், ஆண்ட்ரே சித்தார்த்தும்  பார்ப்பதற்கு சகோதரர்கள் போலவே இருக்கிறார்கள்என்றும், ரச்சின் ரவீந்திராவுக்கு பதிலாக தேவைப்பட்டால்  பதிலாக ஆண்ட்ரே சித்தார்த்தை களமிறக்கலாம் என்றும் இருவரும் ஒரே போல் உள்ளார்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ரச்சின் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்களும் பெங்களூருவை சேர்ந்தவர்கள். ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரை சித்தார்த்தை 30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியானது  ஏலத்தில் எடுத்தது.