தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர்தான் தனுஷ். இவர் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இட்லி கடை படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் நடித்து வெளியான படம் ராயன். இதனைதொடர்ந்து தற்போது அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 55 வது படத்தையும் எடுக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.
இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை மமீதா பைஜூ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மமீதா பைஜூ பிரதீப் ரங்கநாதன், விஜய் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
