தமிழக பாஜக கட்சியின் சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாஜக மூத்த தலைவர்கள் வீட்டிற்கு சென்று நேரடியாக அவர்களை கைது செய்தனர். டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட பேரணி செல்ல இருந்த பாஜகவினரை கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து வைத்த நிலையில் தற்போது அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதாவது நீண்ட நேரம் ஆகியும் போலீசார் விடுவிக்காததால் கோபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது 6:00 மணிக்கு மேல் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பெண்களை போலீசார் விடுதலை செய்த நிலையில் அண்ணாமலை கோபத்தில் எங்களுக்கும் ரூல்ஸ் தெரியும். நீங்கள் இவ்வளவு நேரம் சிறையில் வைத்து விட்டு இப்போது வந்து வெளியே விடுகிறீர்கள். நீங்கள் நாடகம் போடுகிறீர்கள் என்று கோபத்தில் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

அதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை, இனி நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை தூங்கவே கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவிலிருந்து நாங்கள் காவல்துறையை தூங்க விடமாட்டோம். மேலும் போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம். அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் முதல்வர் ஸ்டாலினின் படத்தை பிரேம் போட்டு நாங்கள் மாட்டுவோம். மேலும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்திலும் நாங்கள் ஈடுபடுவோம் என்று கூறினார்.