சேலம் மாவட்டம் மாரியம்மன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(29). இவரது மனைவி வனிதா(25). சின்ராஜ் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பிருந்தே வனிதாவுக்கு அவரது சொந்த ஊரைச் சேர்ந்த வேடராஜ்(27) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வனிதாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட வேடராஜ் வனிதாவை வாழப்பாடிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் வனிதா தனது ஸ்கூட்டியில் வாழப்பாடிக்கு சென்றார்.

அப்போது வேடராஜ் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வானிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அவரிடம் இருந்து வனிதா தப்பித்து ஓடினார். ஆனாலும் வேடராஜ் ஓட ஓட விரட்டி அவரது முதுகு மற்றும் கையில் கத்தியால் குத்தினார். அது மட்டுமில்லாமல் வேடராஜ் தனது கழுத்து மற்றும் மணிக்கட்டை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.