தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி என கூறியுள்ளார்.