
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ரவியின் உறவினரான பிரதீப் என்பவருக்கும் லாவன்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த ரவி பிரதீப்பையும் லாவண்யாவையும் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த லாவண்யா தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு யாரும் எதிர்பாராதவிதமாக லாவண்யா பிரதீப்புடன் ஓடிவிட்டார்.
இதனால் ரவி மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரவி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் தேடி அலைந்தனர். அப்போது ரவியின் உடல் ஹேமாவதி ஆற்றில் மிதந்தது. இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். ஆனால் ரவியின் சகோதரி பிரதீப்பும் லாவண்யாவும் இணைந்து ரவியை கொலை செய்து ஆற்றில் வீசியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.