
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. ஜடேஜா பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
ரோகித் சர்மா அதிகபட்சமாக 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடர் முடிவடைந்த உடன் இந்தியாவின் முன்னணி ஆல்ரவுண்டர் ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இதுகுறித்து ஜடேஜா தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமலே இருந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.