நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர்தான் ஹிந்தியில் பாப்புலர் நடிகையாக இருக்கும் பரினீதி சோபர். சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் பொதுவாக பேட்டிகளில் ஏதாவது ஒரு விஷயம் தவறாக பேசிவிட்டால் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிடும். அந்த வகையில் நடிகை பரீனிதி சோபர் சமீபத்தில் ஒரு பேட்டில் பேசும்போது கட்டிட வேலை செய்வதை கேவலம் போல பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது இவர் சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் தொகுப்பாளர், “நான் அமெரிக்காவில் கட்டிட வேலை செய்திருக்கிறேன். நீங்கள் அப்படி ஏதாவது வேலை செய்து இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பரினீதி, “என்னுடையது அவ்வளவு embrance ஆக எல்லாம் இருக்காது என பேசி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கட்டிட வேலை செய்வது என இவ்வளவு கேவலமா? என்று கோபத்தோடு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
