சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் தொடர்ந்து புதுப்புது விதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது புதிய வகையான மோசடி போர்ன் இணையதளங்கள் மூலம் நடைபெறுகிறது. இது ஒரு போப் அப் அறிவிப்புகளின் மூலம் உங்கள் செல்போன் சட்டவிரோத நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வரும். அந்த அறிவிப்பு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போல இருக்கும்.

இதனால் ஒரு பெரிய அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் கேட்கின்றனர். அப்படி செலுத்தாவிட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று தெரிவிக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அபராதத்தை கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைகள் மூலம் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் பணத்தை மீண்டும் பெற முடியாது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.