கேரள மாநிலம் பொன்னானி நெய்தலூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 11 வயது சிறுவனுக்கு மது, உணவு , பணம் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தாமோதரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் முடிந்தது. இதனால் தாமோதரனை நீதிமன்றம் குற்றவாளி என உறுதிப்படுத்தி 107 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 4.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. தீர்ப்புக்கு பிறகு தாமோதரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தவனூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.