இந்தியாவில் உள்ள கோவா மாநிலம் சுற்றுலாவுக்கு பெயர் போன மாநிலம் ஆகும். இங்கு கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலா  பயணிகளின் எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. இதற்கு பாஜக எம்எல்ஏ மைக்கேல் லாபோ சொன்ன விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது கோவா கடற்கரையில் சிலர் இட்லி சாம்பார் விற்பதால் தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதாவது சிலர் கடற்கரையில் வடபாவு விற்பதாகவும் சிலர் இட்லி சாம்பார் விற்பதாலும் தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என்பது குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் அவர் சொன்ன கருத்து சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.