தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தற்போது தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்திற்கு கிங்ஸ்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த திவ்யா பாரதி மீண்டும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தை ஜிவி பிரகாஷின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ என்று வெளியாகும் இன்று படகுழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.