கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். தைரியம் இருந்தால் அண்ணாச்சாலைக்கு வர சொல்லுங்க என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்திருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதிவை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தரம் இல்லாமல் பேசினால் என்னிடமிருந்தும் தரம் இல்லாமல் தான் பதில் வரும். பிரதமர் மோடிக்கு மரியாதை கொடுத்தால் அண்ணாமலை வாயிலிருந்து மரியாதையான வார்த்தைகள் வரும்.

நேற்று நாங்கள் தொடங்கியது வெறும் ட்ரெய்லர் மட்டும்தான். தமிழகத்தில் மூன்றாவது மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற பாஜகவின் வார்த்தைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கெட் அவுட் மோடி என்ற வார்த்தையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தினார். இப்போது அது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. நாளை காலை 6 மணிக்கு சரியாக நான் எக்ஸ் தளத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்விட் போடுவேன். தமிழகத்திலிருந்து ஸ்டாலின் வெளியேற வேண்டும் என்று ட்வீட் போடுவேன். நாளை பாஜகவின் காலம். இரண்டு நாட்களில் எவ்வளவு ட்வீட் போடுகிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்வோம். இதனை சவாலாக சொல்கின்றேன். அதனைப் போலவே உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்களின் பாணியிலேயே பதில் அளிக்கப்படும் என்று அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.