
முன்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என்று நேற்று முன்தினம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வரும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும். இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.