
மத்திய அரசு சார்பில் வருடம் தோறும் பொது துறை மற்றும் பிற துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல நடிகர் அஜித்குமாருக்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷன் விருதுகள் வாங்குபவர்களுக்கு இன்று ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். மேலும் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால் அவர் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.