உத்திரபிரதேசம் மாநிலம் வலித்பூரில் மாவட்ட மகளிர் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் சங்கீதா என்ற பெண் பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்தனர். ஆனால் பிறந்த 45 நாட்களில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி மருத்துவமனை குப்பை தொட்டியில் ஒரு குழந்தை கிடப்பதாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த குழந்தையின் உடல் நாய்கள் கடித்து குதறிய நிலையில் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சங்கீதாவின் கணவர் அகிலேஷ் உயிரிழந்த குழந்தையின் உடலை பெற்றார். இதனையடுத்து மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு செவிலியர் 200 ரூபாய் கொடுத்தால் குழந்தையின் உடலை தகனம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனால் அகிலேஷ் குழந்தையின் உடலை ஒப்படைத்துவிட்டு, தகனம் செய்ய பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் குழந்தையின் உடலை தகனம் செய்யாமல் குப்பை தொட்டியில் வீசி எரிந்துள்ளார். அதன் பிறகு தான் நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
