இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் பொழுது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருடைய விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். மேலும் இவருடைய காயம் குணமடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்று இருப்பதால் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
