தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாற்றும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது.‌ இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் பெரும் ஆதரவால் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு நடந்த எந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. தற்போது காங்கிரஸ் முன்னிலையில் இருந்த ஒரு இடத்தையும் ஆம் ஆத்மி கட்சி தட்டி தூக்கியது. இதனால் காங்கிரஸ் O தொகுதிகளை பதிவு செய்கிறது.