ஆளுநர் குடியரசு தலைவர்களுக்கு மசோதாவை அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவையில்லை என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.