சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.