இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இந்தியாவிற்கு 3 விதமான உலகக்கோப்பை போட்டியிலும் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமை தோனியை சேரும். இவருக்கு இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற எம் எஸ் தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் எம்எஸ் தோனி அரசியலுக்கு வருவார் என்ற தகவலை காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, அரசியலுக்கு தேவையான மக்கள் ஈர்ப்பு தோனியிடம் இருப்பதால் அவர் ஒரு நல்ல அரசியல் தலைவராக இருக்க முடியும். தோனி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தோனியின் பிரபலத்திற்கு அவருக்கு வெற்றி கிடைப்பது உறுதி. அதன்பிறகு எம்பியாக போட்டியிடுகிறீர்களா என தோனியிடம் கேட்டபோது அவர் அதில் உண்மை இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் அரசியலுக்கு தோனி வருவார் என்ற ஒரு தகவலை காங்கிரஸ் எம்பி  கூறியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.