நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி தாக்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு பிறகு மீண்டும் ரூ. 360 உயர்ந்தது.

இதனால் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 62,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து ஒரு கிராம் 45 ரூபாய் வரையில் உயர்ந்து 7790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இன்று காலை வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் பட்ஜெட் தாக்கல் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.