
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த தங்கையான ஸ்ரீது என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதில் ஏற்கனவே ஸ்ரீதுவுக்கு திருமணமாக இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் கூட ஹரிகுமார் தன் தங்கை மீது ஆன காதலை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தன்னுடைய காதலுக்கு தன் தங்கையின் குழந்தை தான் இடையூறாக இருக்கிறது என்று நினைத்த ஹரிகுமார் குழந்தையை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்துள்ளார்.
குழந்தை கிணற்றில் விழுந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததில்தான் இந்த விவகாரம் தெரிய வந்தது. தற்போது ஹரி குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.