காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. அப்போது நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கி கொண்டனர். நகரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பொறுப்புகள் என கேள்வி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
